சங்கர் மூவீஸ் என்ற பேனரின் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு "என் காதலிலி சீன் போடுறா' என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர்.
இந்தப் படத்தில் "அங்காடிதெரு' மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/differenttitle.jpg)
இவர்களுடன் "ஆடுகளம்' நரேன், மனோபாலா, விஜய் டிவி. கோகுல், டாக்டர் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- ராம்ஷேவா. இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள "டீக்கடை பெஞ்ச்' படத்தை இயக்கியவர்.
படம் பற்றி இயக்குனர் ராம்ஷேவா... ""இன்றைய சமூகத்தில் எல்லாருமே புத்திசாலிலிகள் தான். ஆனால் அவர்களை சாமர்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த புத்திசாலிலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே.
இப்படி நடந்த உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்குப்பிறகு எந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம்.
படப்பிடிப்பு சென்னை, பாண்டி, பொள்ளாச்சி, ஆனைமலை போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெறவுள்ளது'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-05/differenttitle-t.jpg)